New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/cats-6.jpg)
viral video of mother in law surprises her son in law with grand feast of 67 dishes
முக்கனி இல்லாமல் விருந்து முழுமையடையாது என்று கூறும் அவர் அப்பழங்களை தேனில் ஊற வைத்து எடுத்து வைத்துள்ளார்.
viral video of mother in law surprises her son in law with grand feast of 67 dishes
viral video of mother in law surprises her son in law with grand feast of 67 dishes : ஆந்திராவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய மருமகனை வரவேற்க, பாரம்பரிய முறைப்படி 67 வகையான உணவுகளை தயாரித்துள்ளார். தேநீரில் துவங்கி பீடா வரை மொத்தம் 67 வகையான உணவுகளை மேஜை ஒன்றில் வைத்துள்ளார். அந்த உணவு பதார்த்தங்களே உணவு மேஜையை அடைத்துவிட்டது. அவருடைய மருமகன் எப்படி கை வைத்து உண்பார் என்பது சந்தேகம் தான்.
ஆரம்பத்தில் சீனா தட்டில் வைக்கப்பட்டிருக்கும் கேக்கை கட் செய்வது தான் முதல் படி. அதன் பிறகு ஒரு டம்பள்ரில் புதினா ஜூஸ், பின்பு ஸ்டார்ட்டராக கட்லட், வெள்ளரிக்காய் ரோல் பப்பாளி பழம், கோபி 65, பேபிகார்ன் 65 , பேபிகார்ன் பெப்பர், பஜ்ஜி என்று பட்டியல் நீள்கிறது. அந்த உணவுக்கு மத்தியில் 5 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தங்க நாணயம் ஒன்றை கொழுக்கட்டை ஒன்றில் செருகி வைத்துள்ளார் மாமியார்.
மேலும் படிக்க : மனிதம் இன்னும் இறக்கவில்லை ; இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்!
பிறகு உப்பு, இரண்டு வகையான ஊறுகாய், காரப்பச்சடி, ஸ்வீட் பச்சடி என்று ஃபுல் மீல்ஸ் உணவு பதார்த்தங்களை அடிக்கிக் கொண்டே செல்கிறார் அவர். முக்கனி இல்லாமல் விருந்து முழுமையடையாது என்று கூறும் அவர் அப்பழங்களை தேனில் ஊற வைத்து எடுத்து வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.