வீட்டுக்கு வந்த மலை சிங்கத்தை வரவேற்ற குட்டி நாய்; வைரலாகும் வீடியோ

சாரா அங்கிருந்து கொஞ்சம் நகர சிங்கம் அவரை நடுங்க வைக்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Viral video, trending video, videos

Viral video of mountain lion : சமீபத்தில் கொலொரடோவில் அமைந்திருக்கும் க்ராண்ட் லேக் பகுதியில் வசித்து வரும் சாரா போல் என்பவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்த போது பின்வாசல் வழியே நான் பார்த்த காட்சிகள் இது தான் என்று சிங்கம் ஒன்று வீட்டுக் கண்ணாடி கதவுகளை தட்டும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். அந்த கேப்சனில் மேலும் நான் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தால் என்னுடைய குரலும் நடுக்கத்துடன் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

சிங்கத்தை பார்த்த நாய்க்குட்டிக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. கதவிற்கு இந்த பக்கம் நின்று கொண்டு தன்னுடைய வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் சாராவுக்கு உயிரே இல்லை. சாரா நடந்த நிகழ்வை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த அதே வேலையில் அந்த சிங்கம் வேறேதும் வழியாக வீட்டிற்குள் வரலாமா என்றும் நோட்டம் விடுகிறது. சாரா அங்கிருந்து கொஞ்சம் நகர சிங்கம் அவரை நடுங்க வைக்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of mountain lion walked up to the front porch of house

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express