“நான் மாஸ்க்கெல்லாம் மாஸ்” கூலிங்-க்ளாஸ் போட்டு அசத்திய ஒராங்குட்டான் - வைரல் வீடியோ
கீழே விழுந்த கண்ணாடியை எடுத்து சாப்பிட்டு விடாதே என்று லோலிட்டா கூற, அந்த ஒராங்குட்டானோ, ஸ்டைலாக எடுத்து கண்ணில் மாட்டியபடி கூலாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவே ஆரம்பித்துவிட்டது.
Viral video of Orangutan wearing sunglasses : ஒரு புது ட்ரெஸ் அணிந்தால், ஒரு நல்ல ஷூ, கூடவே கூலர்ஸ் என்று வண்டியில் அல்லது காரில் வந்து இறங்கினால் நம்மை பொறுத்தவரை அது ஸ்டைல் தான்; மாஸ் தான்... ஆனால் நம்மூர் ஆட்களை எல்லாம் அடித்து சாப்பிட்டுவிட்டது இந்த ஒராங்குட்டான் குரங்கு.
லோலிட்டா டெஸ்டு என்ற நபர் இன்ஸ்டகிராமில் மைனர் க்ரைம்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டகிராம் மற்றும் டிக்டாக் பக்கங்களில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இந்தோனேசியா சென்ற அவர், அங்குள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் தன்னுடைய கூலிங் க்ளாஸை கை தவறி கீழே விழ, தன் செல்ல குழந்தையுடன் வளம் வந்த ஒராங்குட்டான் என்ன செய்தது என்று இங்கே பாருங்கள்.
டிக்டாக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை ஒரே நாளில் 30 மில்லியன் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். கீழே விழுந்த கண்ணாடியை எடுத்து சாப்பிட்டு விடாதே என்று லோலிட்டா கூற, அந்த ஒராங்குட்டானோ, ஸ்டைலாக எடுத்து கண்ணில் மாட்டியபடி கூலாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவே ஆரம்பித்துவிட்டது.
சில நேரம் இப்படியும் அப்படியுமாக கண்ணாடியை வைத்து சீன் காட்டினாலும், போர் அடிக்கவும், அந்த கண்ணாடியை பார்வையாளர்கள் பகுதியில் தூக்கி வீசிவிட்டது. இந்த செயலை வரவேற்கும் விதமாக அங்குள்ள ஸூ கீப்பர் ஸ்நாக்ஸ் கொடுத்து மகிழ்ச்சிபடுத்தினார்.
நீண்ட முடியுடன் கூடிய பாலூட்டி வகையை சேர்ந்த இந்த குரங்கு வகைகள் உலகில் சுமத்ரா மற்றும் போர்னியோ காடுகளில் மட்டுமே காணப்படும். இவை மிகவும் அசாத்திய அறிவை கொண்டுள்ள விலங்குகள் ஆகும். இந்த நாளில் நீங்கள் பார்க்கும் ஒரு மாஸான, க்ளாஸான வீடியோனா நிச்சயமாக இது தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil