ஏய் தள்ளு தள்ளு தள்ளு தள்ளு… வடிவேலு ரேஞ்சுக்கு விமானத்தை தள்ளிய பயணிகள் – வைரல் வீடியோ

போதுமான தொழில்நுட்ப வசதிகளை அங்கே விரிவுப்படுத்த இயலாத சூழல் இருப்பதால் இப்படி தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது

Viral video of passengers push aircraft

Viral video of passengers push aircraft : சாலையில் சென்று கொண்டிருக்கும் போது 2 சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஏன் பேருந்து கூட ப்ரேக் டவுன் ஆகிவிட்டால் உள்ளே பயணம் செய்யும் நபர்கள் சாலையில் இருந்து அதனை அப்புறப்படுத்த அல்லது ஸ்டார்ட் செய்ய வண்டிகளை தள்ளுவது வழக்கம். ஆனால் இங்கே ஒரு சில பயணிகள் சேர்ந்து ஒரு விமானத்தையே தள்ளியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேபாள் நாட்டில் உண்மையாகவே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். டிக்டாக்கில் முதலில் வந்த இந்த வீடியோவில் ஒரு சிறிய ரக விமானத்தை பயணிகள் பலர் மொத்தமாக தள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இலகுரக விமானமான தாரா ஏர் ஃப்ளைட் என்ற விமானத்தை தான் பஜூரா விமான நிலையத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த விமானத்தின் டயர்கள் வெடித்த நிலையில் இதர விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று பயணிகள் இவ்வாறு தள்ளியுள்ளனர். பயணிகள் மட்டுமின்றி விமான நிலைய ஊழியர்களும் விமானத்தை தள்ளியுள்ளனர். போதுமான தொழில்நுட்ப வசதிகளை அங்கே விரிவுப்படுத்த இயலாத சூழல் இருப்பதால் இப்படி தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of passengers push aircraft off runway in nepal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com