New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/cats-22.jpg)
கிரிக்கெட்டில் ரன்னிங் கமெண்ட்ரியுடன் ஓடும் வீடியோவை போல், யானையின் ஒவ்வொரு சேட்டைக்கும் வரும் ரன்னிங் கமெண்ட்ரி குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை இங்கே பகிரவும்
viral video of single tusker entered Parali EB quarters and playing on dirt : கோவை பில்லூர் அணை அருகே அமைந்திருக்கும் பரளி மின்வாரிய குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானை செய்த குறும்புத்தனத்தை பாருங்கள். உணவு மற்றும் நீருக்காக அடிக்கடி காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருவது வழக்கம். பில்லூர் அருகே வந்த யானை ஒன்று அங்கே இருக்கும் சகதியில் அமர்ந்து அமர்ந்து எழுந்து தன்னுடைய உடலை சகதியால் பூசிக்கொண்டது. பிறகு அங்கே இருக்கும் மின்வாரிய குடியிருப்பு பகுதிகள் காயப்போட்டிருந்த துணிகளை எல்லாம் கீழே இழுத்துவிட்டு, பைக்கை உடைத்து பெரும் ரகளை செய்திருக்கிறது.
பயந்து போன அம்மக்கள் வனத்துறையினரை அழைத்து, யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெண்மணி ஒருவர்,” அட காட்டுக்குள்ள தான் அத்தனை நல்ல சுத்தமான தண்ணீர் இருக்கும் போது, இது ஏன் இங்கிட்டு வந்து செகதில குளிக்குது” என்று கேட்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கிரிக்கெட்டில் ரன்னிங் கமெண்ட்ரியுடன் ஓடும் வீடியோவை போல், யானையின் ஒவ்வொரு சேட்டைக்கும் வரும் ரன்னிங் கமெண்ட்ரி குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை இங்கே பகிரவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.