தேவையா இந்த வேண்டாத வேலை; படபிடிப்பின் போது நடிகையின் தாடையில் சீண்டிய பாம்பு – வைரல் வீடியோ

”உங்கள் அனைவருக்காகவும் நான் பாடல் ஒன்றை படமாக்கிக் கொண்டிருக்கும் போது” என்ற கேப்சனுடன் அவர் வெளியிட்ட வீடியோவை 5 லட்சத்து 12 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

viral video of snake bites rap singer

ரேப் இசைக்கலைஞர் மேட்டா தன்னுடைய பாடல் ஒன்றை, பாம்புகளுடன் சேர்ந்து படமாக்கிக் கொண்டிருக்கும் போது பாம்பிடம் கடி வாங்கியுள்ளார்.

தரையில் படுத்திருந்த நிலையில் அவர் மீது வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் பாம்புகள் ஊர்ந்து செல்வது போன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் படக்குழுவினர்கள் சற்றும் எதிர்பாராத நிலையைல் அவருடைய தாடைப் பகுதியில் பாம்பு தீண்டியது. ஆனால் நல்ல வேளையாக அவருக்கு பெரிய அளவில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை.

கேட்டை தாண்டி எகிறி குதித்து, நாயை அல்லேக்காக தூக்கிச் செல்லும் சிறுத்தைப் புலி – திக் திக் வீடியோ

”உங்கள் அனைவருக்காகவும் நான் பாடல் ஒன்றை படமாக்கிக் கொண்டிருக்கும் போது” என்ற கேப்சனுடன் அவர் வெளியிட்ட வீடியோவை 5 லட்சத்து 12 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த பாடலை படமாக்கும் போது பயன்படுத்தப்பட்ட பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. மேலும் விஷப்பற்கள் நீக்கப்பட்டவை. விஷப்பற்கள் நீக்கப்பட்டாலும் கூட கடுமையாக ஒருவரை பாம்பு தாக்கினால் அது பிரச்சனைக்குரிய விஷயம் தான்.

வனவிலங்குகள், பறவைகள் மற்றும் பாம்புகள் போன்ற உயிரினங்களை கமர்ஷ்ஹியல் தேவைகளுக்காக பிரபலங்கள் படங்களில் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளலாம். மேலும் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of snake bites rap singer while shooting a song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express