பாலைவனத்தில் பனிமழை; ஆச்சரியத்தில் ஆழ்ந்த சவுதி மக்கள்
சவுதி அரேபியாவின் வடமேற்கில் உள்ள தாபுக் பகுதியில் இந்த பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த பகுதியில் அமைந்திருக்கும் ஜாபல் அல் லாவ்ஸ் என்ற மலைப்பகுதி முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.
Viral video of snowfall in Saudi Arabia : சவுதி அரேபியா வளைகுடா நாடுகளில் பனிப்பொழிவு என்பது எப்போதாவது நடைபெறும் அரிய நிகழ்வாகும். அதன் புவியியல் அமைப்பு இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். உலகெங்கிலும் குளிர்காலங்களில் நிலவும் சீதோசண நிலை அங்கே நிகழ்ந்தாலும் பனிப்பொழிவு என்பது சாத்தியமற்ற ஒன்று. இந்நிலையில் இந்த ஆண்டு பனிகாலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.
Advertisment
அல் அரபியா செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் சவுதி அரேபிய மக்கள் நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் வடமேற்கில் உள்ள தாபுக் பகுதியில் இந்த பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த பகுதியில் அமைந்திருக்கும் ஜாபல் அல் லாவ்ஸ் என்ற மலைப்பகுதி முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது. சனிக்கிழமை நல்ல மழை பெய்து முடித்த நிலையில் புத்தாண்டு பனிப்பொழிவுடன் துவங்கியது.
ஜோர்டான் நாட்டின் எல்லைகளை ஒட்டியுள்ள சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் தாபுக் பகுதி அமைந்துள்ளது. ஜாபல் அல் லாவ்ஸ் என்பது பாதம் மரங்களை கொண்டுள்ள மலைப்பகுதி என்று பொருள். தாபுக் நகர்புறத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் இந்த மலைப்பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil