சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் போது துவக்க ஆட்டத்தை முன்னணி வீரர்கள், இதர விளையாட்டு துறையை சேர்ந்தா வீரர்கள், வீராங்கனைகளை வைத்து துவங்குவது உலக நடப்பு. அங்கே சிறப்பான ஆட்டத்தை யார் வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் தான் அனைத்தும் இருக்கிறது. தற்போது பேஸ்பாலின் சிறந்த துவக்கத்தை கொடுத்து அனைவரையும் ஆர்ச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் தென்கொரியாவைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனை கிம் யே-லிம்.
தன்னுடைய ஸ்கேட்டிங் நடனக்கலையின் மூலம் கற்றுக் கொண்ட திறன்களை பயன்படுத்தி முதல் பந்தை எறிய அனைவரும் திகைப்பில் வாயடைத்துப் போனார்கள் என்று தான் கூற வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த வீடியோ உங்களுக்காகத் தான்.
கே. ஐ.ஏ. டைகர்ஸ் மற்றும் எஸ்.எஸ்.ஜி லேண்டர்ஸ் இடையே, இஞ்செயோன் முன்ஹாக் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்த பரபரப்பான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 19 வயது வீராங்கனை. ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இவருக்கு முன்பே சைமோன் பைல்ஸ் தன்னுடைய ஸ்டைலில் பேஸ்பாலில் முதல் பந்தை வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிம் யே-லிம்மின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனார். 20 ஆயிரம் பேர் லைக் செய்ய 3500 நபர்கள் இதனை ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil