பறக்கும் போது சூறாவளிக் காற்றில் “டான்ஸ்” ஆடிய விமானம்; லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு

யாருடா அந்த பைலட், நமக்கே பாக்கணும் போல இருக்குதுன்னு தோணுதுல... கொஞ்ச நேரத்துல அந்த விமானத்துல இருக்குற எல்லாருக்கும் கண்ணு முன்னாடி சாவு பயத்தை காட்டிருப்பாரு போலயே

யாருடா அந்த பைலட், நமக்கே பாக்கணும் போல இருக்குதுன்னு தோணுதுல... கொஞ்ச நேரத்துல அந்த விமானத்துல இருக்குற எல்லாருக்கும் கண்ணு முன்னாடி சாவு பயத்தை காட்டிருப்பாரு போலயே

author-image
WebDesk
New Update
பறக்கும் போது சூறாவளிக் காற்றில் “டான்ஸ்” ஆடிய விமானம்; லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு

Viral video of strong winds almost flip a plane: லண்டன் உள்ள 6 சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோவில் ஒரு மாஸான சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் பிரிட்டிஷ் ஏர்லைன் ஒன்று தரையிறங்குகிறது. கிட்டத்தட்ட ரன்வேயில் சக்கரங்கள் பதிய துவங்குகிற நேரத்தில் பலத்த காற்று வீசுவதால் விமானமே இடப்பக்கம் வலப்பக்கமாக ஆடுகிறது. பலருக்கும் பதட்டம் தந்த நிகழ்வில் அடுத்து என்ன ஆகப் போகிறதோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கும். விமான நிலையத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமின்றி விமானத்தில் பயணித்தவர்களின் நிலையும் அப்படித்தான் இருந்திருக்கும். இந்த சூழலை நன்கு கணித்த விமானிகள் சற்றும் தாமதிக்காமல் விமானத்தை மேற்கொண்டு இயக்க முடிவு செய்துவிட்டனர்.

Advertisment

தரையிறக்குவதால் ஏற்படும் ஆபத்தை நன்கு உணர்ந்த அவர்கள் சற்றும் தாமதிக்காமல் மீண்டும் தங்களின் பயணத்தை துவங்கினார்கள். விமானம் மேலே செல்ல ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலருக்கும் ஒரு பேசு பொருளாக அமைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

Advertisment
Advertisements

யாருடா அந்த பைலட், நமக்கே பாக்கணும் போல இருக்குதுன்னு தோணுதுல… கொஞ்ச நேரத்துல அந்த விமானத்துல இருக்குற எல்லாருக்கும் கண்ணு முன்னாடி சாவு பயத்தை காட்டிருப்பாரு போலயே என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: