Tamil Nadu Forest department releases baby Olive Ridley Turtles into the ocean : ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் ஆமைகள் ஆலிவ் ரைட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கரையை நோக்கி ஆயிரக்கணக்கில் படையெடுக்கும். கடற்கரையில் முட்டையிட்டு தாய் ஆமைகள் சென்ற பின்பு குறிப்பிட்ட நாட்கள் கழித்து முட்டையில் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளியேறி கடல் அன்னையின் மடியை நோக்கி தவழ துவங்கிவிடும்.
Advertisment
மக்கள் பெருக்கம், கடலை சார்ந்திருக்கும் அவர்களின் வாழ்வியல் சூழல் காரணமாக ஆமைகள் இனப்பெருக்க காலம் மற்றும் முட்டைகள் பாதுகாப்பாக இருப்பது போன்றவை கேள்விக்குறியாகி வருகிறது.
தமிழகத்தில் ஆலிவ் ரைட்லி ஆமைகளை பாதுகாக்க கடலோர மாவட்டங்களில் 21 மையங்களை வனத்துறை உருவாக்கியுள்ளது. இந்த மையங்களில் முட்டைகள் பாதுகாக்கப்பட்டு, குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை பத்திரமாக கடலில் விடும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர் தமிழக வனத்துறையினர்.
இப்படியாக சேகரிக்கப்பட்ட முட்டைகள் குஞ்சு பொரித்த நிலையில் இன்று காலை அவற்றை பத்திரமாக கடற்கரையில் கொண்டு வந்து விட்டுள்ளனர் வனத்துறை அதிகாரிகள். நாகபட்டினம் அருகே கடலுக்குள் அழகாக செல்லும் ஆமைகளின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் தமிழக வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹூ.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வீடியோவை கண்டு கழித்துள்ளனர். ஆமைகளின் முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிக்கும் மையங்களுக்கு அனுப்ப தன்னார்வலர்கள் முந்தைய காலங்களில் பெரும் அளவு பங்கேற்பதுண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் யாரும் இந்த பணிகளுக்காக அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil