Tamil Nadu forest department rescuing a leopard : கடந்த சில வாரங்களாக தமிழக வனத்துறையினரின், விலங்கு மீட்பு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது. டி23 ஆப்பரேஷனில் ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் தமிழக வனத்துறையினர். இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்த சிறுத்தைப்புலி ஒன்றை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையிலும் வெற்றி பெற்றுள்ளது வனத்துறை குழு.
கிணற்றில் விழுந்த சிறுத்தைப்புலியை மூங்கில் கூடை மூலம் மேலே தூக்கும் காட்சி ஒன்றை அம்மாவட்ட முன்னாள் ஆட்சியர் சுப்ரியா சாஹூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட சிறுத்தைப் புலி 13ம் தேதி இரவு காட்டுக்குள் மீண்டும் விடப்பட்டது. கிணற்றுக்குள் இருந்து கயிறு மூலம் தூக்கும் காட்சி மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒருவேளை கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சமும் இந்த வீடியோவை பார்த்தவுடன் எழாமல் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil