New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/cats-9.jpg)
தண்ணீர் நிலையம் ஒன்றில் வாத்து ஒன்று நீந்திக் கொண்டிருந்தது. அதை உணவாக பிடித்துவிடலாம் என்று வேட்டைக்காக பதுங்கி பதுங்கி முன்னேறி வந்தது அந்த புலி.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Ducking duck pic.twitter.com/aIBwxSeCTh
— Susanta Nanda (@susantananda3) September 27, 2021
தண்ணீர் நிலையம் ஒன்றில் வாத்து ஒன்று நீந்திக் கொண்டிருந்தது. அதை உணவாக பிடித்துவிடலாம் என்று வேட்டைக்காக பதுங்கி பதுங்கி முன்னேறி வந்தது அந்த புலி.
புலியின் வருகையை உணர்ந்த அந்த வாத்து, புலி நெருங்க ஒரு நொடி இருக்கும் போது லாவகமாக தண்ணீருக்குள் மூழ்கியது. குழப்பம் அடைந்த புலி இந்த வாத்து எங்கே என்று தேடிக் கொண்டிருக்கும் போது புலிக்கு பின்னால் வேறொரு பக்கத்தை நோக்கி முன்னேறி சென்றுவிட்டது வாத்து.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைராக பரவி வருகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரிட்வீட் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.