New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tiger.jpg)
பார்க்கவே ரம்யமான அழகான காட்சியாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே....
viral video of tiger hidden inside the water: பார்ப்பதற்கு சதுப்பு நிலம் போன்ற ஒரு பகுதி. அங்கே வெகுநேரம் மான் ஒன்று அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. பார்க்கவே ரம்யமான அழகான காட்சியாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே எதிரில் புலி ஒன்று பாய்ந்து முன்னேறி மானை வேட்டையாட வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், புலியை கண்டதும் மான் நீருக்குள் இறங்கி தாவி, துள்ளிக் குதித்து ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
Danger often comes from the most unexpected quarters.
— Saket Badola IFS (@Saket_Badola) November 8, 2021
Remain alert, Always !!#SMForward @susantananda3 pic.twitter.com/QD8rKVEaeR
ஆபத்தும், வேட்டை விலங்குகளும் எந்த பக்கமிருந்து வேண்டுமானாலும் வரலாம். நாம் தான் மிகவும் எச்சரிக்கையுடன் அந்த மானைப் போன்று இருக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது இந்த வீடியோ. இந்த வீடியோவை இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.