New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/toddler_1200_twt.jpeg)
இந்த வீடியோ நிச்சயமாக உங்களின் இந்த நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
viral video of toddler singing his heart out : என்ன ஒரு கஷ்டமான காலம் வந்தாலும் அதை மனதிற்குள் கொண்டு செல்ல கூடாது என்பதற்கு குழந்தைகளே மிகச்சிறந்த உதாரணங்களாக இருக்கின்றனர். ப்ரேசில் நாட்டில் மிகியூல் என்ற குட்டி சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் சிகிச்சைகளுக்கு மத்தியில் டிவியில் ஓடும் பாடலை பார்த்து தானும் பாடத் துவங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பார்த்தாலே உற்சாகத்தை தரும் இந்த வீடியோவை பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். சிலர் தங்களின் கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
OMG I just want to run in there and sing with him and hug him https://t.co/Vxt8Y7MVfV
— ☮️ (@xanna) October 10, 2021
— Tamara (@Tamara00044033) October 6, 2021
கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும். அந்த குழந்தை நல்ல உடல்நலத்துடன் தற்போது வீடு திரும்பிவிட்டதாகவும் இந்த வீடியோ கேப்சனில் பதிவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.