இயற்கை எப்போதும் ஆச்சரியங்கள் நிறைந்த்து. இதில் புரிதல் இல்லாமல் மனிதன் குழப்பமடையும் செயல்முறைகள் பல உள்ளது. பழங்காலத்தில் இருந்து இன்று வரை உயிரினங்கள் அனைத்து ஏதாவது ஒரு வகையில் மனிதனின் மூளைக்கு வேலை கொடுத்து வருகின்றன. உயிரினங்கள் செய்யும் விச்சித்திரமான பல செயல்கள் குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது இரண்டு தேனீக்கள் ஒரு ஜூன் பாட்டிலின் மூடியை கழற்றும் அற்புதமான கட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தேனீக்களின் அரிதான செயல் மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரல் களப்பில் இணைந்துள்ளது. இந்த செயலில் கூட்டு முயற்சியினால் எதையும் சாதிக்கலாம் என்று நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேனீக்கள் எப்போதும் புத்திசாலித்தனமாக இருக்கும் என்றும், இப்போது அதன் திறமை மனிதர்களுக்கு தெரியவந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil