Viral video of woman carrying lion in her arms: ஆன்லைனில் பார்ப்பதை எல்லாம் உண்மை என்று நம்பிவிடக் கூடாது. அதுவும் ஒரு பெண் நள்ளிரவில் கையில் சிங்கத்துடன் சென்றால் கட்டாயமாக அதை நீங்கள் ஒரு சந்தேகக் கண் கொண்டு தான் பார்க்க வேண்டும். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ குறித்து தற்போது நெட்டிசன்கள் தங்களின் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் அதிகம் நபர்களால் பகிரப்பட்ட இந்த வீடியோவில் ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் நள்ளிரவில் பெண் சிங்கம் ஒன்றை கையில் ஏந்தியவாறு வருகிறார். பார்க்கும் போதே அந்த சிங்கம் அடம் பிடிப்பதும் அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இது உண்மையா பொய்யா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் குவைத் நாட்டில் உள்ள சபாஹியா மாவட்டத்தில் பெண் ஒருவர் சிங்கம் ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார் என்று அல்-அன்பா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தங்கள் வீட்டுப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிங்கம் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அந்த பெண் தன்னுடைய சிங்கத்தை தேடி கண்டுபிடித்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வரும் காட்சிகள் அது என்று அல் அராபியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது உண்மையோ பொய்யோ என்பது குவைத்திற்கு தான் தெரியும். ஆனாலும் நெட்டிசன்களுக்கு சரியான பொழுதுபோக்காக இது அமைந்துவிட்டது என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil