/tamil-ie/media/media_files/uploads/2022/02/Sudha-Ramen-🇮🇳@SudhaRamenIFS-Twitter.jpg)
Viral video of woman forest officer rescues a snake : பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் வனத்துறை அதிகாரிகளுக்கு அத்தகைய பயம் ஒன்றும் இருப்பதே இல்லை. அவர்கள் பாம்புகளை அரவணைத்து வனங்களை காக்கும் பணிகளை அதிகமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவின் அட்டக்கடா பகுதி அருகே இருக்கும் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பை வனத்துறை அதிகாரி ரோஷிணி ஜி.எஸ், மிகவும் லாவகமாக பிடித்து அதனை காப்பாற்றிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A brave Forest staff Roshini rescues a snake from the human habitations at Kattakada. She is trained in handling snakes.
— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) February 3, 2022
Women force in Forest depts across the country is growing up in good numbers. VC @jishasuryapic.twitter.com/TlH9oI2KrH
இந்திய வனத்துறை அதிகாரி சுதாராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பாம்பை கையால் பிடித்து சுவற்றின் ஓரத்திற்கு அழைத்து வருகிறார் ரோஷிணி. பிறகு பாம்பு இரண்டு மூன்று முறை, அவரது வலது கைப்பக்கத்தில் பாம்பு பிடிக்க உதவும் கம்பியின் பிடியில் இருந்து நவுவிச் செல்கிறது. ஆனாலும் சாதுர்யமாக பாம்பை அங்கே வைத்திருக்கும் துணிப்பை ஒன்றில் அடைத்து பத்திரமாக அவர் தூக்கிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
பாம்பை அவர் பிடிக்க்க செல்லும் போது அருகில் இருந்த ஆண்கள் எல்லாம் பயந்து ஓடும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. வனத்துறையில் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என்று சுதாராமன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
Looks fearless and skilful in handling such beings
— Dr Krishna Kumar (@Krishna36645425) February 3, 2022
சுதாராமன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 200 நபர்கள் இதனை ஷேர் செய்துள்ளனர். பலரும் இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் ரோஷ்ணியின் துணிச்சலை மனமார பாராட்டியுள்ளனர்.
பருத்திப்பள்ளி வனக்கோட்டத்தில் ரோஷிணி, ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் உறுப்பினராகவும், பீட் ஃபாரஸ்ட் ஆஃபிசராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு இந்த பணியில் சேர்ந்த அவருக்கு 2019ம் ஆண்டு விலங்குகளை மீட்கும் பயிற்சி வழங்கப்பட்டது என்று உள்ளூர் பத்திரிக்கைகளில் இவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.