இது நீச்சல் குளம் இல்லங்க; ஒரு குறுங்கடல்… அதிசயக்க வைக்கும் வீடியோ

இந்த நீச்சல் குளம் குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Deep Dive Dubai worlds deepest swimming pool, dubai, poland, deepest poor viral video, indian express, indian express news

Viral video of world’s biggest pool Deep Dive Dubai : Deep Dive Dubai என்பது உலகின் மிக ஆழமான நீச்சல் குளமாகும். கின்னஸ் சான்றினை தக்கவைத்துள்ள இந்த நீச்சல் குளத்தின் ஆழம் சுமார் 60.02 மீட்டர்கள்.

இதற்கு முன்பு போலாந்தில் உருவாக்கப்பட்ட டீப்ஸ்பாட் நீச்சல் குளம் தான் ஆழம் அதிகமாக உள்ள நீச்சல் குளமாக (45.5 மீட்டர்) இருந்தது. இந்த நீச்சல் குளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கின்னஸ் ரெக்கார்ட் வாங்கியிருந்தாலும், துபாயின் இளவரசர் ஹம்தன் பின் முகமது அல் மக்தௌம் இந்த குளத்தின் வீடியோ ஒன்றை ஆன்லைனில் வெளியிட இந்த நீச்சல் குளம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஒருநாள் துபாய்க்கு சென்று இந்த சாகச நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பேன் என்று பலரும் தங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இந்த நீச்சல் குளம் குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of worlds biggest pool deep dive dubai is open to the public

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com