scorecardresearch

Watch: அன்பிற்கு ஏது எல்லை? பறவைகளுக்கு உணவளிக்கும் சிறுவன்.. க்யூட் வீடியோ வைரல்!

அன்பிற்கு எல்லை இல்லை என்பதற்கு சான்றாக சிறுவன் ஒருவன் பறவைகளுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Watch: அன்பிற்கு ஏது எல்லை? பறவைகளுக்கு உணவளிக்கும் சிறுவன்.. க்யூட் வீடியோ வைரல்!

நம் அன்றாட வாழ்க்கையில் ஏராளாமான உணர்ச்சிகளை கடந்து செல்கிறோம். மகிழ்ச்சி, அன்பு, கவலை, சோகம், அழுகை எனப் பலவற்றை எதிர்கொண்டு செல்கிறோம். பல தருணங்களில் சிறு சிறு விஷயங்களும் மகிழ்ச்சியை தருகின்றன. அந்த வகையில் இப்போது சமூக வலைதளங்கள் மிகவும் பிரபலமாகி விட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளம் பயன்படுத்துகின்றன. அதில் காமெடி வீடியோ, வைரல் வீடியோ என தங்களுக்கு பிடித்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றன.

அந்தவகையில் சிறுவன் ஒருவன் பறவைகளுக்கு உணவளிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்படுகிறது. அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று உணர்த்துகிறது. வாலா அஃப்ஷர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிர்ந்துள்ளார். வீடியேவைப் பகிர்ந்து “இந்த உலகில் தாங்கள் தனியாக இருப்பதாக நினைப்பவர்களுக்கு அன்பு நம்பிக்கை அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சிறுவன் அழகாக புல்வெளியில் உட்கார்ந்தபடி, பறவைகள் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு ஒரு குச்சியில் உணவு எடுத்து ஊட்டுகிறார். பறவைகளும் உணவுகளை தங்களுக்கு வசதியாக வாங்கி சாப்பிடுகிறது. இந்த வீடியோ 1.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பலரும் மகிழ்ச்சி பொங்க தங்கள் கருத்துகளை அந்த பதிவில் பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Viral video of young boy feeding birds wins hearts online