Viral video of young girl rescuing a puppy from the mountain stream : இந்த உலகில் நாய்கள் இல்லை என்றால் வாழ்க்கை தான் எவ்வளவு கஷ்டமாகவும் வறட்சியாகவும் மாறிவிடுகிறது. நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவானது அத்தனை நெருக்கமானது. அதனால் தான் எஜமானர்கள் இறந்த பின்னும் அவர்களின் கல்லறைகளை விட்டு செல்லாத நாய்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு நாய்க்கு முடியாமல் போகும் நிலை வந்துவிட்டால்? அந்த இடத்தில் நீங்கள் இருந்தால்? ஒரு கனம் மனம் மேற்கொண்டு எதையுமே யோசிக்காமல் போய்விடும் இல்லையா? அப்படித்தான் இங்கேயும் ஒரு காட்டாற்றில் சிக்கிக் கொண்ட நாயை பார்த்த இளம் பெண்ணுக்கும்.
காட்டாற்றில் சிக்கிக் கொண்ட நாயை பார்த்த அந்த பெண், வெள்ளம் ஏதும் ஏற்படாத நீரோட்டத்தில் இறங்கி நாய் அருகே செல்கிறார். சிக்கிக் கொண்ட பரிதவிப்பில் அந்த நாய்க்குட்டி குரைக்க துவங்குகிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அருகே சென்று, அந்த நாயிடம் பேசி அதன் கோபமான மனநிலையை மாற்றுகிறார் அந்த பெண். பிறகு அந்த நாயின் தலையை மெல்ல மெல்ல வருடிக் கொடுத்து இறுதியாக அந்த நாயை நீரில் இருந்து தூக்கி கொண்டு வெளியே வந்துவிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 94 லட்சம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்தை நீங்கள் எங்களுக்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil