அது சோப்ராவா? காந்தியா? குழம்பிப் போய் பல்பு வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ... வைரல் வீடியோ!

“மொத்த கட்சியும் பப்பு தான்” என்று கேப்சனுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அகாளி தளம் எம்.பி. மஜிந்தெர் சிங்

Viral Video Priyanka Chopra Zindabad congress leader mistakenly cheers : 3 முறை எம்.எல்.ஏவாக இருந்தும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்று காங்கிரஸ் தலைவருக்கு தெரியவில்லை. சோனியா காந்தி ஜிந்தா பாத், ராகுல் காந்தி ஜிந்தா பாத், “பிரியங்கா சோப்ரா ஜிந்தா பாத்” (பிரியங்கா காந்திக்கு பதிலாக) என கோஷமிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுரேந்திர் குமார்.

அவர் அவ்வாறு கூறியது அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை அருகில் இருந்து கேட்ட காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா சுரேந்திர் குமாரிடம் ஜீ அது சோப்ரா இல்ல ப்ரியங்கா காந்தி என்று மாற்ற மீண்டும் ப்ரியங்கா காந்தி ஜிந்தாபாத் என்று கூறுயுள்ளார். அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்கள் அடிக்கடி மக்களிடம் பொய் வாக்குறுதிகளை தருவதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் இப்படியா ஒரு தலைவரின் பெயரை மறப்பது. இந்த வீடியோவை “மொத்த கட்சியும் பப்பு தான்” என்று கேப்சனுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அகாளி தளம் எம்.பி. மஜிந்தெர் சிங் சிர்ஸா.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

‘3ம் பாலினத்தவர்’ என்றால் அஃறிணை உயிரினங்களா?’- திருநங்கைகள் கேள்வி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close