Viral Video: வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான தருணம். அந்த நேரத்தில் அதை விட வேறெந்த விஷயமும் மணமக்களின் மனதில் இருக்காது.
ஆனால் இதற்கு நேர் எதிராய் நடந்திருக்கிறார் மாப்பிள்ளை ஒருவர். திருமணத்தின் போது, நடப்பது தனது கல்யாணம் தான் என்பதை மறந்த மாப்பிள்ளை ஒருவர் தீவிரமாக பப்ஜி விளையாடுகிறார்.
திருமணம் என்பதால் சத்தமான ஒலியில் பாடல் இசைக்கப்படுகிறது. ஆனால் அந்த சத்தத்தால் கூட மாப்பிள்ளையை நிமிர்ந்துப் பார்க்க வைக்க முடியவில்லை.
வந்திருந்தவர்கள் பரிசளிக்கிறார்கள். அதனைக் கூட நிமிர்ந்துப் பார்க்காமல், தனது கவனம் முழுவதையும் செல்ஃபோனில் பப்ஜி விளையாடுவதிலேயே செலுத்துகிறார்.
பக்கத்திலிருக்கும் மணப்பெண்ணோ பாவமாகப் பார்க்கிறார். ’இவரை திருமணம் செய்துக் கொள்வதற்கு முன் சற்று யோசித்திருக்க வேண்டும்’ என அந்த மணப்பெண் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. இந்த ’டிக் டொக்’ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒருவேளை ‘டிக் டொக்’ செய்வதற்காகக் கூட இப்படி செய்திருக்கலாமோ என்னவோ…