New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/seal-escape-killer-whales.jpg)
மரண பயம் என்றால் இப்படித்தான் இருக்கும் போல என்று இருக்கிறது சீலின் முகம்
viral video Seal takes refuge on boat : வேட்டையின் போது ஓடும் மானுக்கும் புலிக்குமான இலக்கு ஒன்றாக இருக்காது. தன்னுடைய உயிரை காத்துக் கொள்ள மான்கள் ஓடும். ஆனால் புலிகள் தங்கள் உணவுகளுக்காக தான் ஓடும். உயிர் பிழைத்தல் என்பது அத்தனை எளிதானதல்ல.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றும் நமக்கு இதைத்தான் சொல்கிறது. 2016ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. 2016ம் ஆண்டில் ஒர்கா என்ற திமிங்கலங்களை பார்ப்பதற்காக வந்த படகு ஒன்றில் உயிரை காத்துக் கொள்ளும் பொருட்டு படகில் குதித்துவிட்டது கடல் சிங்கம்.
அந்த வீடியோவில் நான்கைந்து திமிங்கலங்கள் அந்த சீலை இலக்காக வைத்து விரட்டி வர உயிர் பிழைத்தால் போதும் என்று அந்த படகில் குதித்துவிட்டது. நல்ல வேளையாக அந்த சீலை தான் வேட்டையாடுவோம் என்று எந்த திமிங்கலங்களும் படகுக்குள் பாயவில்லை.
ப்ரிட்டிஷ் கொலாம்பியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது டூர் கைடு ஒருவர் திமிங்கலங்களை பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்தில் படகை நிறுத்தினார். அங்கே தான் சீல் தன்னை உயிரை காப்பாற்றிக்கொள்ள இந்த வழியை பின்பற்றியது. பிறகு அது மீண்டும் கடலுக்குள் குதித்துவிட்டது என்று இந்த வீடியோவை பதிவு செய்த க்ரிக் ஃப்ராஸ்டர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.