இந்தியாவில் வட பகுதியில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு சப்பாத்தி. கோதுமை மாவினால் உருவாக்கப்படும் இந்த சப்பாத்தி செய்ய பல வழிகள் உள்ளது. மேலும் பலவிதமாக சுவைகளிலும் செய்யும் வழியும் உள்ளது. ஆனால் இதை செல்ல நேரம் அதிகம் பிடிக்கும். ஆனாலும் இல்லதரசிகள் சலிக்காமல் இந்த வேலையை செய்து வருகின்றனர்.
Advertisment
அவர்களின் வேலையை சுலபமாக்கவும், சரியான சுற்று மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்தியை உருவாக்குவதற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது. இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு நபர் பிரஷர் குக்கரில் சப்பாத்தியை சமைக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மூன்று சப்பாத்திகள் உருட்டல் பலகை அல்லது சக்லா பெலனில் உருட்டப்பட்டு பின்னர் பிரஷர் குக்கருக்குள் வைக்கப்படுகின்றன. குக்கர் பின்னர் இரண்டு நிமிடங்கள் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு திறந்து பார்த்தால், அதன்உள்ளே சப்பாத்திகள் தயாராக உள்ளன! சமையல் ஹேக்
சில சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோ குறித்து ஆச்சரியப்பட்டாலும், மற்றவர்கள் ஹேக் வேலை செய்யாது என்று கூறுகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்ற பல ஹேக்குகள் வைரலாகிவிட்டன. உதாரணமாக, சமையல்காரர் விகாஸ் கன்னா சமீபத்தில் வாழைப்பழங்களின் ஆயுளை அதிகரிக்க மிகவும் எளிமையான ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு முன்னதாக, மற்றொரு சமையல் ஆர்வலர் மீண்டும் பழமையான ரொட்டியை எவ்வாறு புதியதாக மாற்றுவது என்பதைக் காட்டினார். இந்த ஹேக்குகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இதுவரை முயற்சித்தீர்களா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil