வீடியோ | ஐஸ்கட்டியாகிய ஜூஸ் பாக்கெட்டுகள்… சுத்தியலாலும் உடைக்க முடியாத முட்டைகள்! சவால்களுக்கு மத்தியில் இந்திய ராணுவ வீரர்கள்!

சாதாரணமாக அரிசி சாதம் அல்லது பருப்பு வேகவைப்பது என்பது -30 முதல் - 40 டிகிரி வரை குளிர் இருக்கும் போது  மிகவும் சவாலான காரியம்.

By: Updated: June 9, 2019, 12:12:49 PM

இந்தியாவின் ராணுவத்தினர் எந்த கால சூழலுக்கும் தட்பவெட்பத்திற்கும் தங்களை மாற்றிக் கொள்வது வழக்கம். குறிப்பாக இமாலய மழைத்தொடர்களில் பாதுகாப்பு பணிகளில் அவர்கள் இருக்கின்ற போது அவர்களின் உழைப்பும் தேசத்திற்கான பங்களிப்பும் மிகவும் மரியாதைக்குரியதாகவே இருக்கின்றது.

சியாச்சின் உலகின் மிக குளிர்ச்சியான போர் களம், ராணுவ முகாம்கள் இருக்கும் இடம். கடல்மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் பனிமலைகள் சூழப்பட்ட இடம் தான் இந்த சியாச்சின். இங்கு ராணுவ வீரர்கள் உறை பனியில் நாட்டுக்காக சேவை புரிந்து வருகின்றனர்.

இந்த கடும் குளிருக்கு மத்தியில் இவர்களுக்கான உணவினை தயார் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. சாதாரணமாக அரிசி சாதம் அல்லது பருப்பு வேகவைப்பது என்பது -30 முதல் – 40 டிகிரி வரை குளிர் இருக்கும் போது  மிகவும் சவாலான காரியம். ஆனால் சியாச்சினில் குளிரின் அளவு -60 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும். தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுகள் உறைநிலையில் இருக்கின்றன. இதனை எப்படி உட்கொள்வது என்று நமக்கு டெமோ காட்டுகின்றார்கள் ராணுவ வீரர்கள்.

அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஜூஸ் ஐஸ்கட்டியாகவே மாறிவிட்டது. முட்டைகளை சுத்தியல் கொண்டு பலமுறை உடைத்தும் உடைவேனா என்று சண்டைக்கு நிற்கின்றது. இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய தற்போது இணந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் படிக்க : மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Viral video siachen base camp soldiers demo with frozen juice unbreakable eggs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X