ஒரு சிலந்தியின் வீடியோ அதன் தனித்துவமான அடையாளங்களால் ஆன்லைனில் வைரலாகி வருகிறது. பின்புறம் மனிதனைப் போன்ற முகம் கொண்ட இந்த சிலந்தி சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு வாய் மற்றும் கண்களும் இந்த சிலந்திக்கு உண்டு. சமூக வலைதளங்களில் வெளியான இதன் வீடியோ பலரை ஆச்சர்யப்படுத்தியும், அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் இருக்கும், யுவான்ஜியாங் நகரில் வசிக்கும் லி என்ற பெண்ணின் வீட்டிலிருந்த தொட்டி செடியில் இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டதாக சீனாவின் ’சீனா டெய்லி’ என்ற செய்தி இணையதளம் தெரிவித்திருக்கிறது. சிலந்தியின் பின்புறத்தில் உள்ள கருப்பு கோடுகள் மனித முடியை ஒத்திருப்பதாக லி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த, சீனாவின் ‘பீப்புள்ஸ் டெய்லி’, ”ஸ்பைடர்மேன் கண்டுபிடிக்கப்பட்டாரா? சீனாவின் ஹுனானில் உள்ள ஒரு வீட்டில் மனிதனைப் போன்ற முகம் கொண்ட இந்த சிலந்தி சீன சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதன் இனங்கள் உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டது.
அதற்கு பல விசித்திரமான பதில்கள் குவியத் தொடங்கின.
Has spiderman been found? This spider with a humanlike face on its back was found at a home in C China's Hunan and has gone viral on Chinese social media. Do you know its species? pic.twitter.com/0iU6qaEheS
— People's Daily, China (@PDChina) 16 July 2019
Happy to solve the mystery here. This looks like the harmless thomisid, Ebrechtella tricuspidata. Pic from Yaginuma, 1986. @DrRichJP is lways happy to help with spider facts! ????????️ #LoveSpiders #EverySpiderMatters #CoolCrabSpider pic.twitter.com/a9rh5dyZsM
— Richard J. Pearce (@DrRichJP) 18 July 2019
இருப்பினும் ரிச்சர்ட் ஜே பியர்ஸ் என்பவர், அந்த அபூர்வ சிலந்தியின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தார். "இங்கே மர்மத்தைத் தீர்ப்பதில் மகிழ்ச்சி. இது பாதிப்பில்லாத சிலந்தி. எபிரெட்செல்லா ட்ரிகுஸ்பிடேட்டா இனத்தைப் போல தெரிகிறது. சிலந்தி பற்றிய உண்மைகளுக்கு உதவுவதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி” என ட்விட்டரில் தெளிவுப் படுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.