ஆசையாய் சிறுமி வளர்த்த மரத்தை அழித்த அதிகாரி... அழுது அழுதே வைரலான சிறுமி.

தேம்பி தேம்பி அழுத வீடியோ ஒட்டு மொத்த இணையத்திலும் வைரலானது.

தேம்பி தேம்பி அழுத வீடியோ ஒட்டு மொத்த இணையத்திலும் வைரலானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral video tamil

viral video tamil

viral video tamil : மணிப்பூரில் 9 வயது சிறுமி தான் வளர்த்த 2 மரங்கள் வெட்டப்பட்டதற்கு கண்ணீர் வடித்து அழுத வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த சிறுமியை மணிப்பூர் மாநில பசுமை தூதராக தேர்வு செய்து அரசு அறிவித்துள்ளது.

Advertisment

மணிப்பூர் மாநிலத்தில் கக்சிங் மாவட்டத்தை சேர்ந்தவர் எலங்பம் வேலண்டீனா தேவி. 9 வயதான இவர் அறுகில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மரங்கள் மீதும் இயற்கையின் மீதும் அளாதியான பிரியம் வைத்திருந்த தேவி ஒன்றாம் வகுப்பு படித்த போது தனது வீட்டிற்கு அருகே இருக்கும் ஆற்றங்கரைக்கு பின்னால் உள்ள சாலையின் ஓரம் இரண்டு செங்கொன்றை மரக்கன்றுகளை நட்டு வைத்து தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மணிப்பூர் அரசு ஒரு உத்தரவிட்டது . அதில் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுமாறு கூறியது. அந்த சமயத்தில்தான் சிறுமி தான் தண்ணீர் ஊற்றி நிழல தரும் என நினைத்து வளர்த்த 2 மரங்களும் அணுவணுவாக வெட்டப்பட்டன.

இந்த சம்பவத்தால் சிறுமி பெரிதும் வருந்தினார். தான் வளர்ந்த மரம் வெட்டப்பட்டதால் மிகவும் வேதனையடைந்த அவரது அழுகுரல் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியானது. தேம்பி தேம்பி அழுத வீடியோ ஒட்டு மொத்த இணையத்திலும் வைரலானது.

Advertisment
Advertisements

இந்த வீடியோவை மணிப்பூர் மாநில முதலமைச்சரான பிரன் சிங் மற்றும் வனத் துறை அமைச்சரான ஷியாம் குமார் சிங் ஆகிய முக்கியப் பதவிகளி வகிப்போர் பார்த்து பரிதாபம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அந்த மாநில முதலமைச்சர் பிரென் சிங், அந்த மாணவியை சமாதானப்படுத்த அவரிடம் மரகன்றுகள் கொடுக்கப்பட்டதாகவும் பசுமை மணிப்பூர் திட்டத்தின் பசுமை தூதராக அந்த மாணவியை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மரத்தின் மீது சிறுமிக்கு உள்ள ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டும், அவரது முயற்சியை பாராட்டும் பொருட்டும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 மரக்கன்றுகளை நட்டுள்ளனர் அச்சிறுமி வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞர்கள்.

இயற்கையின் காதலியான எலங்பம் வேலண்டீனா தேவிக்கு அம்மாநில அரசு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கும் செய்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: