நீ தாய் இல்லை பேய்! பயம் காட்டிய அம்மாவை திட்டி தீர்த்த குழந்தைகள்

தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது

தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral video today trending

viral video today trending

viral video today trending : கத்திரிக்கோல் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு புரிய வைக்க தாய் செய்த மிரட்டல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு என்னவென்றால் அது தாயின் கடமைதான். தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயானவள் தனது குழந்தைக்கு கற்பிக்கும் சில பல விஷயங்கள் தான் அவர்களின் இளமைக்கால வளர்ப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

இங்கு 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் செய்த மிகவும் பயம்முடுத்தக் கூடிய செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது. தனது அம்மாவை செல்லமாக கடிந்துக் கொள்ளும் அவர்களின் பாசமும் வீடியோவில் தெரிகிறது.

எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும் கெட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. ஒரு விஷயத்தை பொறுமையாக உட்கார வைத்து எடுத்து சொன்னால் எளிதில் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அது எளிதில் புரிந்தும் விடாது. அதே விஷயத்தை அவர்கள் பயம்படும் வகையில் சொன்னால் மறுபடியும் அதை கனவில் கூட நினைத்து பார்க்க மாட்டார்கள்.

Advertisment
Advertisements

இந்த இரண்டாவது வழியை பின்பற்றிய அம்மாவின் வீடியோவை தான் இப்போது பார்க்க போகிறீர்கள்.

பள்ளி முடிந்து ஆசையாக வீடுக்கு வருகிறார்கள் குழந்தைகள். உள்ளே நுழைந்த சிறுவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. தரையில் அவனின் அம்மா நாக்கில் கத்திரிக்கோலை மாட்டிக் கொண்டு இரண்டாக பிரிந்த நாக்குடன் துடி துடிக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்து அம்மா அம்மா என கதறி அழுகிறான் அவன்.

சத்தத்தைக் கேட்டு அவனின் அக்கா அடுத்ததாக உள்ளே நுழைகிறாள். அவளோ இடி விழந்தது போல் கத்தி ஊரையே கூட்டுகிறாள். உடனே தரையில் படுத்துக் கொண்டிருந்த அம்மா எழுந்து போலியான நாக்கை எடுத்துவிட்டு சும்மா விளையாட்டு பயப்படாதீங்க என்கிறார்.

உடனே அந்த குழந்தைகள், ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் எங்களை அழ வைத்தீர்கள் என்று தனது தாயிடம் செல்லமாக கடிந்துக் கொள்கிறார்கள். அதற்கு அந்த தாய், உங்களுக்கு புரிய வைக்க தான், கத்திரிக்கோலினால் வரும் ஆபத்து, கத்திரிக்கோல் தரையில் இருக்கும் போது அவசரமாக ஓட கூடாது என்பதை உங்களுக்கு புரிய வைக்க தான் இப்படி செய்தேன் என்று விளக்குகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: