viral video twitter today : ”நான் பெத்த சிங்கக்குட்டி என்னோட மல்லுக்கட்டி எனக்கே பயம் காட்டுது கண்மணி என் கண்மணி” இப்போது அந்த தாய் சிங்கத்தின் கரணட் மைண்ட் வாய்ஸ் சாங் இதுதான். அமைதியாக படுத்திருக்கும் தாய் சிங்கத்தை அதன் குட்டி சிங்கம் ஒன்று பயத்தால் தெறிக்க விட்ட வீடியோ ஒட்டு மொத்த இணையத்தையும் புரட்டி போட்டுள்ளது.
Advertisment
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை வீடியோ பார்த்த அனைவரும் மீண்டும் மீண்டும் ப்ளே செய்து ரிப்பிட் மோடில் இந்த வீடியோவை பார்த்து வருகிறார்கள். நீங்களும் முதலில் பார்த்துவிடுங்கள்.
ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் தாய் சிங்கம் ஒன்று, மூன்று குட்டிகளுடன் வாழ்ந்து வருகிறது.இந்த மூன்று குட்டிகளுமே சேட்டை பிடித்த சிங்கக்குட்டிகளாக இருப்பதாக பாதுகாவலர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளனர். இதை உண்மை என விளக்கும் வீடியோ தான் இப்போது நீங்கள் பார்த்த சம்பவம்.
தாய் சிங்கம் முன்னால் படுத்திருக்க தனக்கு எதிரே இருக்கும் 2 சிங்கக்குட்டிகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தாய் சிங்கத்தையே தெறிக்க விட அந்த 3 ஆவது சிங்கக்குட்டி சத்தமே இல்லாமல் நடந்து வந்து தாய் சிங்கத்தின் பின்னாடி நின்றுக் கொண்டு வவ்'வென்று கத்தி பயம் காட்டுகிறது.
உடனே, தாய் சிங்கமும் அலறி அடித்துக் கொண்டு எழுகிறது. பார்ப்பதற்கே இந்த வீடியோ அவ்வளவு க்யூட்டாக இருக்கும் போது தினமும் அந்த 3 சிங்கக்குட்டிகளும் என்னென்ன வேலை பார்க்கும் என்று நினைத்து பாருங்கள். மொத்தத்தில் பாவம் அந்த தாய் சிங்கம் தான். இந்த குட்டிகள் 2 மாதத்திற்கு முன்பு தான் பிறந்துள்ளன.
இவர்கள் தினமும் அடிக்கும் லூட்டி கூண்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.