Advertisment

ஆத்தி! புதரை சுத்தம் செய்ய போன இடத்தில் முதியவரின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு .. திகில் வீடியோ

7 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு முதியவரின் கழுத்தில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral video twitter trending

viral video twitter trending

viral video twitter trending : தமிழக-கேரள எல்லையான நெய்யாறு அணை பகுதியில் புதரை சுத்தம் செய்ய சென்ற முதியவரின் கழுத்தை மலைப்பாம்பு இறுக்கிக் கொண்ட திகில் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

நெய்யாறு அணை பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் புதர்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளிக்காட்டைச் சேர்ந்த புவனச்சந்திரன் என்ற முதியவர் புதரை சுத்தம் செய்ய தனியாக சென்றார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவரின் கழுத்தில் மலைப்பாம்பு ஏறி சுற்றிக்கொண்டது. அதனால் பயந்துபோன தொழிலாளி அலறியடித்து பதறினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள், அவர் கழுத்தில் இருந்த மலைப்பாம்பை எடுக்க துணிந்தனர். முதியவருக்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் சமார்த்தியமாக பாம்பை அவர்கள் நீக்கினர்.

பின்பு தகவலறிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

7 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு முதியவரின் கழுத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் திகில் காட்சிகள் பார்ப்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment