சிங்க கூட்டம் ஒன்று சேர்ந்து முதலையை வேட்டையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருந்தால், நீரிற்குள் ராஜாவாக முதலை வாழ்கிறது என்றே சொல்லலாம்.
இரண்டுமே வேட்டையாடுவதில் திறமையான விலங்காக இருக்கும்பட்சத்தில், அவை இரண்டிற்கும் சண்டை வந்தால் யார் வெற்றியடைவார் என்ற கேள்வி எழுகிறது.
நீரிற்குள் வேட்டையாடுவது என்றால் முதலையை மிஞ்ச எந்த உயிரினமும் இல்லை என்று சொல்லலாம், ஆனால் நிலத்தில் சிங்கமே வெற்றியடையும்.
இப்படிப்பட்ட சூழலில், தனக்கு வல்லமை இல்லாத நிலத்தில், நிலத்தில் சிறப்பாக வேட்டையாடும் சிங்கத்திற்கு மத்தியில் முதலை சிக்கிக்கொண்டது.
ஆனால், தனது பலத்தை முடிந்தவரை வெளிப்படுத்தி சிங்கங்கள் மத்தியில் இருந்து தப்ப முயன்றது. இருப்பினும், நேரம் அதற்கு சாதகமாக இல்லாததால், முதலை சிங்கத்திடம் பெரும் பாடுப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.