New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/trump-18.jpg)
viral video today
பின்னாடி வந்த ராட்சத அலைகள் அவரை அப்படியே தூக்கி அடித்தது.
viral video today
viral video today : சீன பெண் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலைகளால் தூக்கி வீசப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய நவீன யுக பெண்கள் ஃபோட்டோ, செல்பி மீது காட்டும் ஆர்வம் பார்ப்வர்களை பயப்பட வைக்கிறது. போஸ் இப்படி இருக்க வேண்டும், பின்னாடி பேக் ரவுண்ட் இப்படி தெரிய வேண்டும், நான் அழகாக தெரிய வேண்டும் என்று மாஞ்சி மாஞ்சி இவர்கள் ஃபோட்டோ எடுப்பதில் காட்டும் கவனத்தை கொஞ்சமாவது அவர்களின்பாதுகாப்பில் காட்டினால் நன்றாக இருக்கும்.
செல்பி அறிமுகத்திற்கு பலியான உயிர்கள் ஏராளம். ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்ட செல்பிகள் என்று இணையத்தில் ஏகப்பட்ட வீடியோக்கள் பரவி வருகின்றன. அப்படி ரிஸ்க் எடுத்து எதற்கு அந்த செல்பிக்களை எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஒருமுறை புகைப்படம் நன்றாக வரவில்லை என்றால் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உயிர் ஒருமுறை போனால் போனது தான். அடுத்த செல்பி எடுக்கவாது நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா?
இப்படி தான் சீனாவில் இருந்து இந்தோனேஷியாவிற்கு சுற்றுளா சென்ற இளம்பெண் ஒருவர், ஃபோட்டோ எடுக்கும் ஆர்வத்தில் பாறையின் விளிம்பில் நின்றுக் கொண்டு போஸ் கொடுக்க , பின்னாடி வந்த ராட்சத அலைகள் அவரை அப்படியே தூக்கி அடித்தது.
அலையால் தூக்கி எறியப்பட்ட அந்த பெண் பாறைகளுக்கு நடுவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நெஞ்சை பதைபதைக்கும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீங்களும் பாருங்கள்..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.