பைக்கில் ஏ.டி.எம்… அதுவும் ஓனர் சொன்னாதான் பணம் தரும்… வைரலாகும் வொண்டர் பைக்!

இதனை வேறு யாரும் திருடிக் கொண்ட போக முடியாது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Viral video wonder bike functions over voice commands
Viral video wonder bike functions over voice commands

Viral video wonder bike functions over voice commands : உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் பரெய்லியில் முகமது சயீத் என்பவர் வசித்து வருகிறார். பயங்கரமான பைக் வெறியரான இவர் வாய்ஸ் கமெண்ட் மூலம் செயலப்டும் பைக் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு வொண்டர் பைக் என்று பெயரும் வைத்துள்ளார். அந்த பைக்கில் ஸ்பீக்கர்கள், கண் சிமிட்டும் ஹெட்லைட்டுகள், ஏ.டி.எம் போன்ற வசதிகளுடன் அந்த பைக்கை தன்னுடைய வாய்ஸ் கமெண்ட் மூலம் இயக்குகிறார் முகமது சயீத்.

டார்ஜான் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக்கில் ஏ.டி.எம் ஒன்று செயல்படுகிறது. எ.டி.எம் கொண்ட முதல் பைக் தன்னுடையது தான் என்று கூறும் முகமது சயீத் தான் கூறியதும், ஏ.டி.எம்மில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் கீழே விழுகின்றன.

இந்த பைக்கின் முன்பக்கம் இரண்டு ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பாடல்கள் கேட்டுக் கொண்டே பயணிக்க விரும்புபவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்றே கூறலாம். ஹேண்ட் கெஸ்ச்சர்ஸ் மூலம் தானாகவே பார்க் ஆகிக் கொள்ளும் இந்த பைக் ஸ்டார்ட் ஆவதற்கும் வாய்ஸ் கமெண்ட் தான் தேவை. இதனை வேறு யாரும் திருடிக் கொண்ட போக முடியாது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video wonder bike functions over voice commands trending news

Next Story
சொந்த காசில் சூனியம் வைத்த கதை! கார் கண்ணாடியை உடைக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கொடுமைviral trending video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express