நிஜ ஜூராசிக் பார்க் காட்சிகள்.. ஆனால் இந்த முறை காரை நொறுக்கியது காண்டாமிருகம்!

காருக்குள் சிக்கிய ஊழியர் பயங்கரமான காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில்

காருக்குள் சிக்கிய ஊழியர் பயங்கரமான காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
viral videos

viral videos

viral videos : ஜூராசிக் பார்க் படத்தை பார்த்த அனைவருக்கும் இந்த சீன் ஆல் டம் ஃபேவரெட். மின்சார வலையத்தில் இருந்து தப்பிக்கும் ஜூராசிக் ஒன்று பச்சை நிற காரை சுக்கு நூறாக உடைக்கும் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக இருக்கும். அப்படியொரு ஒரு நிஜ காட்சி தான் இப்போது நீங்கள் பார்க்க போகிறீர்கள். ஆனால் இம்முறை காரை நொறுக்கியது காண்டாமிருகம்.

Advertisment

ஜெர்மனியில் உள்ள சஃபாரி வனவிலங்கு பூங்கா உலக புகழ்பெற்ற ஒன்று. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த பூங்காவில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சஃபாரி பூங்காவிற்கு 18 மாதங்களுக்கு முன்பு குஷினி என்ற காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டது. 30 வயதான இந்த காண்டாமிருகம் இனப்பெருக்கத்திற்காக இந்த பூங்காவில் கொண்டு வந்து விடப்பட்டது. வந்த நாளிலிருந்து அனைவரிடம் நட்புடன் பழகி வந்த குஷினிக்கு திடீரென்று எனனவாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. தன்னை பராமரிக்கும் ஊழியரிடமே கொடூரமாக நடந்துள்ளது குஷினி.

அந்த பூங்காவில் குஷினினை பராமரிக்கும் ஊழியர் ஒருவர் காரில் விலங்குகள் நடமாடும் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது காருக்கு பக்கவாட்டிலிருந்து திடீரென தோன்றிய குஷினி காரை முட்டி மோதி நொறுக்கியது. இதனை தூரத்திலிருந்து கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment
Advertisements

உடனே பார்வையாளரில் ஒருவர் இந்த காட்சிகளை தனது செல்போனில் படம் எடுத்தார். காண்டாமிருகம் தாக்கியதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காருக்குள் சிக்கிய ஊழியர் பயங்கரமான காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பூங்காவின் மேலாளர் ஃபேப்ரிஜியோ செப் கூறியதாவது, குஷினி ஏன் இவ்வளவு கோபமடைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார். மேலும் காண்டாமிருகம் கடந்த 18 மாதங்களாக பூங்காவில் வசித்து வருகிறது. இன்னும் தனது புதிய சூழலுடன் பழகிக் கொண்டிருந்தது என்றும் கூறினார்.

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: