வைரல் வீடியோ: வாயால் உணவுப்பொருட்களை அரைத்து சமைக்கும் ’புதுவித’ பெண்

ஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பெண் ஒருவர் உணவுபொருட்களை தன் வாயாலேயே அரைத்து சமைப்பது ஆச்சரியமாக உள்ளது.

எவ்வளவோ புதுவிதத்தில் சமைக்கும் வீடியோக்களை இணையத்தில் பார்த்திருப்போம். காடுகளில், மலைகளில் என சாகச பயணங்கள் மேற்கொள்பவர்கள் அங்கு கிடைக்கும் உயிரினங்களை சமைத்தோ, சமைக்காமலோ உண்ணுவார்கள். ஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பெண் ஒருவர் உணவுபொருட்களை தன் வாயாலேயே அரைத்து சமைக்கிறார்.

அந்த வீடியோவை பார்ப்பதற்கு முன்பு, இன்னும் நீங்கள் சாப்பிடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்துவிடுவீர்கள். அப்பெண் கிறிஸ்துமஸை முன்னிட்டு கோழியை சமைக்கிறார். கோழியின் உள்ளே ஸ்டஃப் செய்வதற்கான காய்கறிகள் எல்லாவற்றையும் தான் வாயாலேயே அரைத்து துப்புகிறார். முட்டையை தன் வாயாலேயே கலக்கி பாத்திரத்தில் ஊற்றுகிறார். பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் உங்களுக்கு. அந்த கலவையை கோழியின் உள்ளே வைத்து அதன்பின் சமைக்கிறார்.

சமைத்ததுடன் மட்டுமல்லாமல், அது தயாரானதும் மிகவும் ருசித்து அதனை சாப்பிடவும் செய்கிறார். ஆனால், அந்த வீடியோவை பார்த்த நம்மால் தான் இனி சாப்பிட முடியாது என நினைக்கிறேன்.

×Close
×Close