அடடா இதல்லவா காதல்! விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் அசத்தல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் திருமணம் பற்றியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதல் பற்றியும், இன்று வரை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

விராட் மற்றும் அனுஷ்க இருவருமே, உடல் ஆரோக்கியத்திலும், ஃபிட்னஸிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதிலும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் சேலன்ஜ் வைரலானதை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடிக்கே சவால் விட்டவர் விராட் கோலி.

இதைத் தொடர்ந்து விராட் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா இருவரும், ஜிம்மில் ஒன்றாக உடல் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது விராட் செல்ஃபி வீடியோ ஒன்றில், தனது மனைவியைக் காதலுடன் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

A post shared by Virat Kohli (@virat.kohli) on

×Close
×Close