நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, காரில் சென்ற இளைஞர்களிடம் சண்டைக்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்ட விராட் - அனுஷ்கா ஜோடி பாதி நேரம் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலியே செலவிட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது 5 வீடியோக்களை ஆவது இந்த ஜோடி இணையத்தில் ஷேர் செய்து விடுகின்றனர். அந்த வீடியோக்கள் எல்லாமே அடுத்த 1 மணி நேரத்திற்குள் வைரலாகி விடுகின்றன.
இந்த ஜோடிகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் இவர்கள் இருவரின் காதல் அனைவரையும் பொறாமை பட வைத்துள்ளது. குறிப்பாக விராட் அனுஷ்காவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்து பேசியதில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு அனுஷ்கா நேரில் வருவதை ரசிகர்கள் பலமுறை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். ஆனால் அப்போதும் அனுஷ்காவில் பக்கம் நின்று அவரை கைப்பிடித்தப்படியே விராட் அரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இப்படி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி காதலை கொட்ட, விராட் கோலி தனது ட்விட்டரில் அனுஷ்கா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்கள் முதலில் வீடியோவை பாருங்கள்.
அந்த வீடியோவில் அனுஷ்கா தனது காரில் சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு பின்னால் வந்த காரில் பயணித்த இளைஞர்கள் சிலர் ரோட்டில் குப்பை வீசி சென்றுள்ளனர். இதைப் பார்த்த அனுஷ்கா கோபத்தில் உடனே காரை நிறுத்தி அந்த இளைஞர்களிடம் சண்டைக்கு செல்கிறார். பின்பு, அவர்களிடம் சுத்தம் குறித்து சின்ன அட்வைஸையும் தருகிறார்.
தனது மனைவியின் பொறுப்பான செயலை பார்த்து வியந்த விராட் கோலி, அதை பெருமையுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.