New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/05/flag-73.jpg)
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
வீரேந்திர ஷேவாக் இந்த பெயரை கேட்டாலே ரசிகர்கள் மைதானத்தில் எழுப்பும் கரகோஷங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஷேவாக், தற்போது ஐபிஎல் பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.
அதே சமயம் சமூகவலைத்தளங்களிலும் ஷேவாக்கிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வரும் ஷேவாக பல தருணங்களில் அதிரடியான அரசியல் குறித்த கருத்துக்களையும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வயதான மூதாட்டி ஒருவர் வேகமாக ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவில் அந்த மூதாட்டில் சற்றும் பயமில்லாமல் அதிவேகத்தில் மரத்தில் ஊஞ்சல் ஆடுவார். மூதாட்டியின் இந்த செயலை கண்டு பலரும் வியந்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பாட்டியை புகழ்ந்து தள்ளி உள்ளார். அத்துடன் அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
Forever young. Amazing grandma ! pic.twitter.com/M8OHrA8d6h
— Virender Sehwag (@virendersehwag) 28 May 2018
இதில், ஹைலைட் என்னவென்றால் அந்த ஷேவாக் பதிவிட்டிருக்கும் வீடியோ பின்னால் தமிழ் பாடல் ஒலிக்கும் படி எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.