வைரல் வீடியோ: மாமியார் என்றாலே பதறும் ஷேவாக்!

பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்தர் சிங் ஷேவாக், அவரின் டுவிட்டர் பக்கத்தில், தனது தாயை கலாய்த்து வேடிக்கை வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

பல வருடங்களாக கிரிக்கெட் மைதானத்தில் எதிர் அணிகளை ஒரு கைபார்த்தவர் வீரேந்திர சிங் ஷேவாக். அதே அளவு எனர்ஜியை தற்போது டுவிட்டரிலும் ஃபாலோ செய்து வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று ஷேவாக் பதிவு செய்த டுவீட் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவருக்குள் இருக்கும் நகைச்சுவை நாயகனை மக்கள் முதலில் அறிந்த நாள் அன்று.

இதனைத் தொடர்ந்து அவரின் நகைச்சுவை திறமையை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார் ஷேவாக். இன்றைய டுவீட்டில் அவர் தன் தாயை கேலி செய்து, வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கணவர் மனைவியின் கால்களை கழுவிக்கொண்டிருக்கிறார், திடீரென மனைவியின் மாமியார் (அதாவது கணவரின் தாய்) வந்தவுடன், கால்களை வேகமாக வெளியே எடுத்துவிட்டு தனது தலையைக் கழுவ தொடங்குகிறார். மாமியாரிடம் இருந்து மனைவியைக் காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது அந்த வீடியோ.

இந்த வீடியோவை பகிர்ந்த ஷேவாக், “தீடிரென மாமியார் வந்துவிட்டல்ல் என்ன நிகழும்.” என்று கருத்தும் எழுதியுள்ளார். இந்த காமெடி வீடியோ இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

×Close
×Close