நெட்டிசன்கள் கையில் சிக்கி தவித்த விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்!

தேச துரோகிகள் குறித்து படத்தில் கமல் பேசி இருக்கும் வசனம் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இந்த வார டெம்பெல்ட்.

4 வருடங்களுக்கு முன்பு கமல் இயக்கி, நடித்திருந்த திரைப்படம் தான் விஸ்வரூபம்.பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்திருந்த இந்த திரைப்படத்தின் கதை பற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து. சரியாக சொல்ல வேண்டும் என்றால் படத்தை குறைந்தது 4 அல்லது அதற்கு மேல் பார்த்தால் தான் புரியும். இது படத்தை பார்த்த சாமானிய மக்களின் கருத்து.

அதே நேரம், படத்தின் நீளம் காரணமாக முதல் பாகத்தில் அவிழ்க்காத முடிச்சுக்களை எல்லாம் விஸ்வரூபம் 2 படத்தில் அவிழ்க்க இருப்பதாக கமல் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கான ஷூட்டிங் எல்லாம் முடித்து தற்போது படம் வெளிவர தயாராகி விட்டது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விஸ்வரூபம் 2 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தான், நேற்றைய தினம் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லரை கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஷாசன் வெளியிட்டார். இணையத்தில் இந்த ட்ரெய்லர் ஹிட் அடித்த போதிலும் நெட்டிசன்களின் கையில் விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோவாக உருமாறியுள்ளது. குறிப்பாக தேச துரோகிகள் குறித்து படத்தில் கமல் பேசி இருக்கும் வசனம் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இந்த வார டெம்பெல்ட்.

×Close
×Close