அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், உலப் பணக்காரர் எலோன் மஸ்க் உடன் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட அரசுத் திறன் துறைக்கு தலைமையேற்பார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயர்களில் ஒன்றாக மாறியுள்ளார். இந்த முயற்சியில் எலான் மஸ்க் முக்கிய பங்குடன், அரசாங்க செலவின மேற்பார்வையை மேம்படுத்துவதற்கான தனது பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்ற ட்ரம்பின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஆங்கிலத்தில் படிக்க: Vivek Ramaswamy trends on Google after Trump nominates him to lead efficiency department
ட்ரெண்ட்ஸ் கூகுல் தரவுகளின்படி, விவேக் ராமசாமியின் பெயர் 10,000-க்கும் மேற்பட்ட தேடல்களுடன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது, இந்தியாவில் புதன்கிழமை காலை வெறும் 3 மணி நேரத்தில் தேடல் அதிகரிப்பில் 900 சதவீதம் ஸ்பைக் காட்டுகிறது.
பிரபல இந்திய - அமெரிக்க தொழிலதிபரும் குடியரசுக் கட்சி அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஆதரவாக வலுவான கருத்துக்களுக்கும் அசைக்க முடியாத ஆதரவிற்கும் பெயர் பெற்றவர்.
தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு ஓஹியோவில் பிறந்து வளர்ந்த விவேக் ராமசாமி தன்னை இந்து என்று அடையாளப்படுத்துகிறார். ஆனால், ரோமன் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் பட்டம் பெற்றவர். பின்னர், யேல் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். 38 வயதில், அவர் ஒரு மில்லியனர் மற்றும் முன்னாள் பயோடெக் நிர்வாகி ஆவார்.
பிப்ரவரியில் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தபோது நீண்ட கால வேட்பாளராக கருதப்பட்ட போதிலும், விவேக் ராமசாமி, டிரம்பை பாதுகாப்பதில் கவனம் பெற்றார். இறுதியில் அவர் போட்டியில் இருந்து விலகிய போதிலும், அவர் டிரம்பை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். குறிப்பாக கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் மத்தியில், குடியரசுக் கட்சியில் உள்ள முக்கிய குழுக்களில் ஆதரித்து வருகிறார்.
இந்துவாக இருந்தாலும், விவேக் ராமசாமி அடிக்கடி அமெரிக்காவின் அடித்தளத்தை "கிறிஸ்தவ மதிப்புகள்" மற்றும் "ஜூடியோ-கிறிஸ்தவ கொள்கைகள்" ஆகியவற்றை வலியுறுத்துகிறார், அமெரிக்க அடையாளத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஒரு தேசியவாதியாக தன்னை முன்னிறுத்துகிறார்.
டிரம்ப் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரச்சார நிகழ்வின் போது டொனால்ட் டிரம்ப் மீதான சமீபத்திய தாக்குதலைக் கண்டித்து விவேக் ராமசாமி தலைப்புச் செய்திகளை வெளியிட்டார். இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.