அரசியலில் குதித்த விஜே மகேஸ்வரி: இதற்குத்தான் அந்தக் கட்சிக்கு ஆதரவா?

Viral news in tamil, VJ Maheswari tweets for support political party: பிரபல டிவி தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி ட்டுவிட்டரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளது. அவர் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் பணிபுரிந்ததால் அந்த கட்சிக்கு ஆதரவு தருகிறாரா, என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

VJ Maheshwari lifestyle, maheshwari chanakyan
ஜி தமிழ் மகேஸ்வரி

தேர்தல் நெருங்கி வரும்  நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அரசியல் கருத்துக்கள் மற்றும் மோதல்கள் தான் அதிகம் நடைப்பெற்று வருகின்றன. தொலைக்காட்சிகளிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களே ஆக்கிரமித்துள்ளன.

திரை நட்சத்திரங்கள் மற்றும்  டிவி நட்சத்திரங்கள் சிலர் நேரடி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஆதரவாக களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். சிலர் சமூக வலைதளங்களில் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல டிவி தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி ட்டுவிட்டரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளது. அவர் சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் பணிபுரிந்ததால் அந்த கட்சிக்கு ஆதரவு தருகிறாரா, என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், கடந்த சில நாட்களாகவே அவர் ட்டுவிட்டரில் அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதனால் அவர் அரசியலில் இறங்குகிறாரா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர் சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்பு கலைஞர் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘காமெடி கில்லாடிஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக உள்ளார்.

மகேஸ்வரி, ’பிக்பாஸ்’ ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் ’புதுக்கவிதை’, ‘தாயுமானவன்’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vj maheswari tweets for support political party

Next Story
இனி ரெகுலரா வீடியோ போடுவாங்கப்பா… யூ டியூபில் சுனிதா செம டான்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com