Netizens Praise SunTV VJ Manimegalai: கொரோனா ஊரடங்கால் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொரோனாவை எதிர்த்துப் போராடும் தூய்மைப் பாணியாளர்களைப் பாராட்டி பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஃபிரண்ட் ஆகியுள்ளார். அவரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், 4 மாதங்களில் அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பரவி ஒரு கொள்ளை நோயாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலக அளவில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் சமூகப் பரவல் மூலம் வேகமாக பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருண்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஆனால், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கொரோனா எதிர்த்து பணி செய்து போராடி வருகின்றனர். அவர்களுடைய அர்ப்பணிப்பு மிக்க பணிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பளினியான மணிமேகலை, தன்னுடைய கிராமத்தில், கொரோனாவை எதிர்த்து போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி அவர்களுடன் ஃபிரண்ட் ஆகி உள்ளார்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை, சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் ஆனார். ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்போது அவருடைய கிராமத்து வீட்டில் இருக்கிறார். அவர் தூய்மைப் பணியாளர்களுடன் ஃபிரண்ட் ஆனதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், “நான் தங்கியிருக்கும் கிராமத்தின் தூய்மை பணியாளர்கள். 2 நாட்களாக ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். இந்த சூழலில் இவ்வளவு வெயிலிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். நம்முடைய நாட்டைன் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் பெரிய பெரிய மரியாதை “ என்று தெரிவித்துள்ளார்.
மணிமேகலை தூய்மைப் பணியாளர்கள் உடன் ஃபிரண்ட் ஆனதை வரவேற்று நெட்டிசன்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து மணிமேகலைக்கு மணியான மனசு என்று கூறி பாராட்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”