Vijay TV VJ Manimegalai News: சன் மியூஸிக், சன் டிவி, சன் நியூஸ் என சன் நெட்வொர்க் டிவிகளில் கலக்கிவிட்டு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தொகுப்பாளினி மணிமேகலை தனது சிறிய வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் யார் என்று அடையாளம் கண்டுபிடியுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/New-Project-80-300x200.jpg)
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சினிமா படப்பிடிப்பு, தொலைக்காட்சி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சினிமா நடிகர்கள், நடிகைகள், டிவி பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பற்றியும் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் சினிமா நடிகர்கள், டிவி பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். விழிப்புணர்வு வீடியோக்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கும்படியாக வேடிக்கையான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், சன் மியூஸிக், சன் டிவி, சன் நியூஸ் என சன் நெட்வொர்க் டிவிகளில் தொகுப்பாளினியாக முத்திரை பதித்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜே மணிமேகலை தனது சிறிய வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவைப் பற்றி மணிமேகலை குறிப்பிடுகையில், “யாரோ என்னை பயங்கரமா டென்சன் பண்ணியிருக்காங்க இந்த போட்டோ எடுக்கும்போது... அதான் மொகரக்கட்டை இப்படி இருக்கு. இந்தப் போட்டோவில் என்னை ஈசியாக கண்டுபிடித்துவிடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"