Vijay TV VJ Manimegalai News: விஜே மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடச்சுட பதிவேற்றியுள்ள ஒரு க்யூட் விளையாட்டு வீடியோ சமூக ஊடங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
சன் மியூசிக் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் விஜே மணிமேகலை. தனது இனிமையான, வெகுளித்தனமான பேச்சு, நகைச்சுவையான உரையாடல் என ரசிகர்களைக் கவர்ந்தவர் மணிமேகலை.
விஜே மணிமேகலை தனது திறமையால் சன் மியூசிக் டிவியில் மட்டுமல்லாமல், சன் டிவி, சன் நியூஸ் என சன் நெட்வொர்க் டிவிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.
விஜே மணிமேகலை
தனது இனிமையான பேச்சு, யாரையும் புன்படுத்தாத நகைச்சுவையான கலாய் வெற்றிகரமான தொகுப்பாளினியாக திகழும் மணிமேகலை, உதவி நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே மேலும் பிரபலமானார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தேவையில்லாமல், வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மக்கள் ஊரடங்கைக் கடைபிடித்து, வீட்டிலேயே இருக்க வேண்டும் என சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் விஜே மணிமேகலை, அவருடைய கிராமத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் ஃபிரண்ட் ஆகிவிட்டதாகக் கூறி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலானது.
இந்த நிலையில், மணிமேகலை, தனது தோழியுடன் ஒரு க்யூட் கேம் விளையாட, அவர் நகைச்சுவையாக திட்டமிட்டு சாணியில் தள்ளிவிட்டுள்ளார். மணிமேகலை அந்த க்யூட் விளையாட்டு விடியோவை இன்ஸ்டாகிராமில் சுடச்சுட வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.
மணிமேகலை வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தோழி ஒருவருடன் கைகளைப் பிடித்து ஐஸ் பாய் சுற்றி விளையாடுகிறார். அப்போது, தோழி, மணிமேகலையை கலாய்க்க வேண்டும் என்று திட்டமிட்டும் சுற்றும்போது, திடீரென கைகளை நழுவ விட்டு அவரை மாட்டு சாணம் கொட்டிவைக்கப்பட்ட குப்பையில் தள்ளிவிடுகிறார். மணிமேகலைக் குப்பையில் விழுந்ததைப் பார்த்த நண்பர்கள் தோழிகள் எல்லாம் சிரித்து அவரை கிண்டல் செய்கின்றனர். இந்த விளையாட்டு நிகழ்வை மணிமேகலையின் கணவர் ஹுசைன் வீடியோ பதிவு செய்துள்ளார். மணிமேகலை சாணத்தில் விழும்போது சரியாக குளாஸப் வைத்து வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மணிமேகலை, நண்பர்களின், செயலை நகைச்சுவையாக, “என்னவொரு வில்லத்தனம், இவ்ளோ நாள் நல்ல பிள்ளைங்கள மாதிரி இருந்துட்டு.. இப்போது என்னையே ஏமாத்துறாங்க இந்த சிறுவண்டு பசங்க. சாணியில தள்ளிவிட்டதுக்கு அடுத்த விளையாட்டுல பழி வாங்கனும். இதுதான் என்னோட சின்னவயசு ஃபேவரேட் கேம். கோபி பைஸ் கோகனா பைஸ்.... ஆனால், நான் கீழ விழுந்தது பத்திகூட கவலைப்படாம சாணிக்கு குளோஸப் வச்சப் பாத்தியா டேய்! ஹுசைன் உனக்கு இருக்குடா” என்று தனது கணவரை செல்லமாக கடிந்துகொண்டு பதிவிட்டுள்ளார்.
மணிமேகலையின் இந்த க்யூட் விளையாட்டு வீடியொ சமூக ஊடங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"