பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பவை. கண்ட இடங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் விலங்குகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதற்கு பல நிகழ்வுகள் நாள்தோறும் உதாரணங்களாக நடந்துகொண்டிருக்கின்றன.
அப்படி வீசி எறியப்பட்ட ஒரு காலி பிளாஸ்டிக் பால் பாட்டிலில் ஒரு பாம்பு எலியை விழுங்கிவிட்டு பாட்டிலுகுள் தலையைவிட்டு மாட்டிக்கொண்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்துவந்த பாம்புகளைப் பிடிக்கும் தன்னார்வலர் ஒருவர் தேங்காய் எண்ணெய்விட்டு பாம்பை லாவகமாக வெளியே எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பாம்பு பாட்டிலுக்குள் தலையை நுழைத்து சிக்கிக்கொண்டிருக்கிறது. அதை பாம்புகளைப் பிடித்து மீட்கும் ஒரு தன்னார்வலர் வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த பாம்பு ஒரு எலியை விழுங்கிவிட்டிருந்ததால் வெளியே எடுக்க முடியவில்லை. உடனடியாக அருகில் இருப்பவரிடம் அந்த பாட்டிலின் வாய் பகுதியில் தேங்காய் எண்ணெய் ஊற்றச்சொல்லி நல்ல உயவு கிடைத்த பிறகு, பாம்பை மெல்ல பாட்டிலில் இருந்து வெளியே இழுக்கிறார். பாட்டிலுக்குள் சிக்கி பாம்பு பத்திரமாக மீட்கப்படுகிறது.
இந்த வீடியொ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “ஒரு நாகப்பாம்பு அதன் தலையை ஒரு பால் பாட்டிலுக்குள் நுழைத்து எலியை விழுங்கியது. உடல் வீக்கம் காரணமாக பாட்டிலின் விளிம்பில் சிக்கிக் கொண்டது.
ஸ்னேக் ஹெல்ப்லைன் தன்னார்வலர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி, கொடிய நாகப்பாம்புகளுக்கு உயவூட்டி, மெதுவாக அதை வெளியே இழுத்துச் விடுவித்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
எலியை விழுங்கிவிட்டு பாட்டிலுக்குள் சிக்கிக்கொண்ட பாம்பை தன்னார்வலர்கள் தேங்காய் எண்ணெய் ஊற்றி உயவு ஏற்படுத்தி பாம்பை மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“