கோவை அருகே சிக்கிய 15 அடி ராஜநாகம்: வீடியோ

ராஜநாகத்தை வனத்துறையினர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

By: July 12, 2020, 12:30:33 PM

கோயம்பத்தூர் தொண்டாமுத்தூர் நரசிபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் 15 அடி நீலத்தில் ராஜநாகம் ஒன்று இருப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து, மீட்பு நடவடிகையை துரிதப்படுத்திய ஊழியர்கள், சற்றும் பதட்டப்படாமல் ராஜநாகத்தை தங்கள் கைகளால் பிடித்து மூட்டையில் மடக்கினர். பின்னர், ராஜநாகத்தை வனத்துறையினர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து, ஊர் மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், ” இந்த பகுதியில் உள்ள விவாசய நிலங்களில் அவ்வப்போது ராஜநாக பாம்பு  பிடிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தற்போது, பிடிக்கப்பட்ட ராஜநாகத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டுள்ளதால் மீண்டும் இதே பாம்பு எங்கள் பகுதிக்குள் வராது என நம்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

வனத்துறையினர் ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி வருகிறது.

 

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Watch a 15 feet long king cobra rescued video from narasipuram village in coimbatore

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X