வீடியோ: இது முதல் முறை! குடியரசு தின விழாவில் பெண் படையினர் நிகழ்த்திய பைக் ஸ்டண்ட்

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், முதன்முறையாக எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீராங்கனைகள் இருசக்கர வாகன சாகசத்தை புரிந்தனர்.

டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்ட 69-வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், முதன்முறையாக எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீராங்கனைகள் இருசக்கர வாகன சாகசத்தை புரிந்தனர்.

இத்தகைய இருசக்கர வாகன சாகசத்தை வீராங்கனைகள் நிகழ்த்திக் காட்டியது இதுவே முதன்முறை. அந்த வீராங்கனை குழுவினருக்கு ‘சீமா பவானி’ என பெயரிடப்பட்டிருந்தது.

இந்த வீராங்கனைகள் குழுவினருக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்ஸின் நோர்யாங் என்பவர் தலைமை வகித்தார். இரு சக்கர வாகனத்தை இயக்கிக்கொண்டே, பிரதமர் நரேந்திரமோடிக்கு சல்யூட் செய்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மொத்தம் 16 விதமான சாகசங்கள் மற்றும் அக்ரோபேட்டிக்ஸை வீராங்கனைகள் நிகழ்த்திக் காட்டினர்.

‘சீமா பவானி’ படையில் மொத்தம் 113 பெண்கள் பங்கு பெற்றிருந்தனர். சாகசத்திற்கு மொத்தம் 26 350சிசி ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தினர். இந்த வீராங்கனைகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

×Close
×Close