இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? கல்யாணத்துக்கு மாப்பிளை ரோட் ரோலரிலா வருவது!

விலையுயர்ந்த காரில் கூட மாப்பிளை அழைப்பு நிகழ்த்தி இருக்கலாம் ஆனால் ரோட் ரோலரில்

மாப்பிள்ளை அழைப்பு. திருமணத்திற்கு முன்பு நடைபெறும் இந்த சடங்கிற்கு கண்டிப்பாக வித்யாசமாக வர வேண்டும் என எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் பெங்காலி மாப்பிள்ளை ஒருவருக்கு வந்த இப்படி ஒரு ஆசை இணையத்தில் வைரலான அளவிற்கு மிகவும் வித்யாசமானது.

மேற்கு வங்கத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அக்ரா என்பவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் மாப்பிளை அழைப்பு என்றால் மணமகனை குதிரை அல்லது காரில் மண்டபத்திற்கு அழைத்து வருவர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ரோட் ரோலரில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றுள்ளது.

மாப்பிள்ளை அழைப்புக்கு ரோட் ரோலர் தான் வேண்டும் என்றும் மாப்பிள்ளை அடம் பிடித்துள்ளார். இவர் ரோர் ரோலரில் ஊர்வலமாக வலம் வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து ரோட் ரோலரில் வந்த மணமகன் கூறியதாவது, “எனது திருமணம் பிற திருமணங்களை போல் நடைபெறக்கூடாது. வித்தியாசமான முறையில் நடைபெற வேண்டும் என எண்ணினேன். அதனால்தான் மாப்பிள்ளை அழைப்பு வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ரோட் ரோலரில் மண்டபத்திற்குச் சென்றேன்.

விலையுயர்ந்த காரில் கூட மாப்பிளை அழைப்பு நிகழ்த்தி இருக்கலாம் ஆனால் ரோட்ரோலரில் மாப்பிளை அழைப்பு நிகழ்த்தியவன் நான் மட்டும் தான் இருப்பேன் “என்று அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close