/tamil-ie/media/media_files/uploads/2022/02/Ministry-of-Railways@RailMinIndia.jpg)
videos of trains passes through snow-covered Shimla : வட இந்தியாவில் எப்போதும் டிசம்பர் மாதம் அதிக பனிப்பொழிவு இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி முதல் பனிப்பொழிவு அதிகமாகி வருகிறது. இயல்புக்கு மாறான சூழலில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கை பெரிதும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பனி என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதும் கொட்டும் உறைபனி. ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல் வீடெல்லாம் பனியால் சூழ்ந்து, கூரைகளில் எல்லாம் பனித்தூவல்கள் நிறைந்துள்ளது.
அடிக்கடி சீறும் பாம்பு; துணிச்சலாக பிடித்து காப்பாற்றிய பெண் வனத்துறை அதிகாரி - வைரல் வீடியோ
ஜெர்மனியில் இருக்கும் ஹார்ஸ் ஸ்டீம் ரயில்வே ரூட்டில் செல்லும் ரயில்களைப் போன்று பனிசூழ்ந்த சிம்லாவில் இந்திய ரயில்வே ரயில்கள் செல்லும் காட்சிகள் பிரம்மிப்பு அளிக்கும் வகையில் அத்தனை உயிரோட்டம் உடையதாக, கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கிறது.
#WATCH | Himachal Pradesh: Train services continue amid snowfall in Shimla. pic.twitter.com/TOmOs3luT0
— ANI (@ANI) February 4, 2022
ஏ.என்.ஐ. வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவும் சிம்லாவில் ஏற்பட்டுள்ள பனிமழையின் நடுவே இயக்கப்படும் ரயில்களின் பல வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Kalka-Shimla Heritage railway line known for its incredible engineering feat is a UNESCO listed World Heritage Site
— Ministry of Railways (@RailMinIndia) February 7, 2021
A dedicated pointsman signals, as the train beautifully chugs amidst heaps of snow near Shimla Station. pic.twitter.com/H4zKNwtGmd
இந்த பனிப்பொழிவு வருகின்ற புதன்கிழமை வரை நீடிக்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. பனிப்பொழிவால் பாதிப்பு ஏதும் இல்லை என்பதால் தொடர்ந்து இந்த தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்திருப்பதால் பொதுமக்கள் ஆனந்தத்தில் இப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.